Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனை 3 மடங்கு வளர்ச்சி!

இந்தியாவில் கடந்த 2013ம் ஆண்டில் ஸ்மார்ட்போன் விற்பனை மூன்று மடங்கு அதிகரித்து 4.40 கோடியாக உயர்ந்துள்ளது. 2012ல் 1.62 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகி இருந்தது. ஐ.டீ.சி. நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளி விவரம் வாயிலாக இது தெரிய வந்துள்ளது. 2013ல் ஸ்மார்ட்போன் பயன்பாட்டில் இந்தியா அதிவேக வளர்ச்சி கண்டுள்ளது எனவும் இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
 
 
ஸ்மார்ட்போனுக்கும், சாதாரண செல்போனுக்கும் இடையில் உள்ள விலை வித்தியாசம் குறைந்து வருவதால் ஸ்மார்ட்போன் வாங்குவதில் பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனை வெளிப்படுத்துகின்ற வகையில், 2013ல் ஸ்மார்ட்போன் விற்பனை 3 மடங்கு உயர்ந்துள்ள நிலையில், ஒட்டுமொத்தத்தில் செல்போன் விற்பனை 18 சதவிகிதம் அதிகரித்து 25.70 கோடியாக உயர்ந்துள்ளது.
 
2012ல் மொத்த செல்போன் விற்பனையில் ஸ்மார்ட்போன்களின் பங்களிப்பு 7.4 சதவிகிதமாக இருந்தது. இது, 2013ல் 17.1 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இது, ஸ்மார்ட்போன் விற்பனை சூடுபிடித்துள்ளதையே காட்டுகிறது.  கடந்த 2013ல் அக்டோபர் - டிசம்பர் மாதத்தில் ஸ்மார்ட்போன் விற்பனை 2012ம் ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 181 சதவிகிதம் அதிகரித்து 53.50 லட்சத்திலிருந்து 1.51 கோடியாக உயர்ந்துள்ளது.  அக்டோபர் & டிசம்பர் மாதத்தில் மொத்த ஸ்மார்ட்போன் விற்பனையில் 38 சதவிகித பங்கைப் பெற்று கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. அடுத்தபடியாக மைக்ரோமேக்ஸ் 16 சதவிகித பங்கையும், கார்பன் 10 சதவிகித பங்கையும் பெற்றுள்ளன. சோனி மற்றும் லாவா ஆகிய நிறுவனங்களின் பங்கு முறையே 5 சதவிகிதம் மற்றும் 4.7 சதவிகிதமாக உள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ