Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விவாசாயிகள் தினம் கொண்டாட்டம்!

டிராக்டர் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் டிராக்டர்ஸ் அண்டு ஃபார்ம் எக்யூப்மெண்ட் லிமிடெட் நிறுவனம், வருடாந்திர விவசாயிகள் தினத்தை பிப்ரவரி25ல் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடத்தியது. 

 

 
தொடர்ந்து ஒன்பது ஆண்டுகளாக நடத்தப்படும் இந்த விழாவில் பங்கேற்ற நேஷனல் ரிசர்ச் சென்டர் ஆன் சீட் பைசஸ்ஸின் இயக்குனர் பால்ராஜ் சிங், சென்ட்ரல் அரிட் ஜோன் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் படீடர், ஆர்.கே. கோயல் மற்றும் பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விதை வகையினங்களில் மேம்படுத்தப்பட்ட உற்பத்தி தொழில்நுட்பம், வளர்ச்சி பகுதிகளில் தீவன உற்பத்தி மேம்பாட்டிற்கான மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம், வறட்சி பகுதிகளில் நீர்பிடிப்பு அடிப்படையிலான ஆதாரங்கள் பாதுகாப்பு, வறட்சிப் பகுதிகளில் மண் மற்றும் நீர்பிடிப்பு மேலாண்மைக்கான மரங்கள் போன்ற சில தலைப்புகளில் பேசப்பட்டது. மேலும் பேரீச்சம்பழம் உற்பத்தி குறித்த உரையும் வழங்கப்பட்டது. மேலும் 16 சிறந்த விவாசாயிகளுக்கு மிகச்சிறந்த வேளாண்சாதனைகளுக்காக கௌரவபடுத்தப்பட்டனர்.  
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ