Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியாவின் முதல் தபால் அலுவலக சேமிப்பு வங்கி ஏடிஎம் சென்னையில் தொடங்கப்பட்டது

இந்தியாவின் முதல் அஞ்சல் அலுவலக சேமிப்பு வங்கி ஏடிஎம்-ஐ சென்னை தியாகராய நகரில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்  தொடங்கி வைத்தார்.


சுமார் 4909 கோடி ரூபாய் செலவில் அஞ்சல்துறை நவீனமயமாக்கபடவுள்ளது என்று தெரிவித்த அவர். இந்த முதல் ஏடிஎம் - ஐ தொடர்ந்து டெல்லி மற்றும் மும்பையில் நான்கு ஏடிஎம்கள் பயன்பாட்டிற்கு தயாராக உள்ளன என்றும், 2014ம் ஆண்டுக்குள் 1000 ஏடிஎம்கள் மற்றும் 2015ம் ஆண்டுக்குள் 1800 ஏடிஎம்கள் என்று இலக்கு நிர்ணயிக்கபட்டுள்ளதாக தெரிவித்தார்.

தற்போது இந்த ஏடிஎம்களை பயன்படுத்துபவர்கள் அந்தந்த தபால் அலுவலக ஏடிஎம்களில் மட்டும் பண பரிமாற்றம் செய்யலாம் என்றும் விரைவில் இந்த சேவை வங்கிகளுடன் இணைக்கபட்டு அனைத்து வங்கி ஏடிஎம்களையும் பணம் எடுக்க பயன்படுத்தலாம் என்றும் தபால்துறை தெரிவித்துள்ளது

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close