Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புவியியல் அடையாளம் பெறுகிறது திருப்பதி லட்டு

புவியியல் அடையாளம் பெறுகிறது திருப்பதி லட்டு

திருப்பதி லட்டுவை போன்றே போலி லட்டு தயாரித்து சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் திருப்பதி தேவஸ்தானம் பெயரில் விற்பதாக சென்னை உயர்நீதி மன்றத்தில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.


இதுபோன்ற போலிகளை தடுக்க திருப்பதி லட்டுவுக்கு புவியியல் அடையாளம் மற்றும் வணிக குறியீடு பெற விண்ணப்பித்துள்ளதாக ஆந்திர தொழில் மேம்பாடு மற்றும் விளம்பர மையம் தெரிவித்துள்ளது. இப்படிபட்ட ஒரு பொருள் புவியியல் அடையாளத்திற்கு விண்ணப்பிக்கப்படுவது இந்தியாவில் இதுவே முதல் முறையாகும்.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP