Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியாவின் முதல் ஆன்லைன் மொத்த விற்பனை நிறுவனம் : ஷாப்க்ளூஸ்


ஷாப் க்ளூஸ் நிறுவனம் இந்தியாவின் முதல் ஆன்லைன் மொத்த விற்பனை நிறுவனமாக மாறியுள்ளது. இதில் வாடிக்கையாளர்கள் மொத்தமாக ஆர்டர் செய்து பொருட்களை பெறலாம் என்றும், இங்கு சில்லறை விற்பனையில் வாங்குவதைவிட இரண்டு அல்லது மூன்று சதவிகிதம் விலை குறைவாக வாங்கலாம் என்றும் இந்நிறுவன சிஇஓ மற்றும் இணை நிறுவனர் சஞ்சய் சேத்தி தெரிவித்தார்.

மேலும் ஏற்கனவே உலக சந்தையில் இதுபோன்ற ஆன்லைன் மொத்த விற்பனையாளர்களான அலிபாபாவின் 1688.காம் போன்றவை ஒரு நாளில் 4200கோடி மதிப்புள்ள பொருட்களை விற்கின்றன. இந்தியாவில் ஆன்லைனில் மொத்த விற்பனையை முதலில் ஷாப்க்ளூஸ் தொடங்கியிருப்பதால் இந்நிறுவனம் நல்ல வரவேற்பை பெறும் என்றும் கூறினார்.

ஃப்ளிப் கார்ட், அமேசான் போன்ற நிறுவனங்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே மொத்த விற்பனையை அனுமதிக்கின்றன. ஈபே மொத்த விற்பனைக்கும் சில்லறை விற்பனைக்கும் ஒரே விலை நிர்ணயிப்பதாலும் இந்நிறுவனம் மொத்த விற்பனையில் தன்னை தனித்துவபடுத்தி கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close