Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வருடம் அச்சடிக்கப்படாத நோட்டுகளுக்கு அவகாசம் நீட்டிப்பு!

2005ம் ஆண்டுக்கு பிறகு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளில், நோட்டுக்கள் அச்சிடப்பட்ட ஆண்டு குறிப்பிடப்பட்டு இருக்கும். கள்ள நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக, இந்த பாதுகாப்பு அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், 2005\ம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளில், அவை அச்சிடப்பட்ட ஆண்டு இருக்காது. இந்நிலையில், புழக்கத்தில் உள்ள ஆண்டு எண் அச்சிடப்படாத அனைத்து வகை ரூபாய் நோட்டுகளையும் வாபஸ் பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்தது. இதை ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
 
 
இதன்படி, 2005ம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட, ஆண்டு இடம்பெறாத ரூ.500, ரூ.1,000 உள்பட அனைத்து ரூபாய் நோட்டுகளும், வருகிற மார்ச் 31ந்தேதிக்கு பிறகு வங்கிகளை தவிர வேறு எங்கும் வாங்கப்பட மாட்டாது. அதையும் தாண்டி அந்த நோட்டுகளை, வைத்து இருப்பவர்கள் அவற்றை ஏப்ரல் 1ந்தேதி முதல் வங்கிகளில் கொடுத்து வேறு நோட்டுகளை பெற்றுக்கொள்ளலாம். எந்த வங்கியிலும் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம். அனைத்து வங்கிகளும் இதற்கான வசதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. ஆனால் அந்த நோட்டுகளை மாற்ற ஜூலை 1ம் தேதி வரையில் ரிசர்வ் வங்கி கால அவகாசம் அளித்தது.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
[X] Close