Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 263 புள்ளிகள் ஏற்றம்!

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.95 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதையடுத்து இன்று இந்திய பங்கு சந்தைகள் ஏற்றத்தில் உள்ளன. பங்கு சந்தையின் சென்செக்ஸ் 263 புள்ளிகள் அதிகரித்து 21,209 ஆக முடிவடைந்தது. இதேபோல் நிஃப்டி 76 புள்ளிகள் அதிகரித்து 6,297 ஆக முடிவடைந்தது.
 
 
குறிப்பாக ஹிண்டால்கோ நிறுவன பங்கின் விலை 7 சதவிகிதம் அதிகரித்தும், ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவன பங்கின் விலை 3 சதவிகிதம் அதிகரித்தும், பர்ஸ்வநாத் மற்றும் எஸ்.பி.ஐ போன்ற நிறுவன மற்றும் வங்கி பங்குகளின் விலை தலா 2 சதவிகிதம் அதிகரித்தும், பெட்ரோநெட், டாடா ஸ்டீல் போன்ற நிறுவன பங்குகளின் விலை தலா 1 சதவிகிதம் அதிகரித்தும் முடிவடைந்தது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ