Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இ-ஆதார் அட்டை: வங்கி ஆதாரமாக வைத்துக் கொள்ளலாம்.

வங்கிகளில் வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட் உள்ளிட்ட சில ஆவணங்களை மட்டுமே வங்கிகள் சரியான ஆதாரமாக எடுத்துக் கொண்டிருந்தன. ஆனால் சிலமாதங்களாக ஆதார் அட்டையை வங்கிகள் அடையாள அட்டையாக எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் ஆதார் அட்டை மூலம் சிலிண்டர்கள் போன்றவற்றிற்கு கட்டாயமாக்கப்பட்டிருந்தது.
 
ஆனால் தற்போது ஆதார் அட்டை சரிவர கிடைக்காததால் அந்த உத்தரவு தடை செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து ரிசர்வ் வங்கி தற்போது வங்கிகள் இ-ஆதார் அடையாள அட்டையை வங்கிகள் ஆதாரமாக எடுத்துக்கொள்ளலாம். ஆதார் அட்டையை ஆன்லைனில் பதிவு செய்து காத்திருப்பவர்கள், பதிவு செய்த பக்கத்தை (ஆதார் எண் இருக்கும் பக்கத்தை) பிரிண்ட் செய்து கொடுத்துக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ