Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்செக்ஸ் 30 புள்ளிகள் ஏற்றம்!

வருகின்ற ஏபரல் 7ம் தேதி  நாடாளுமன்ற தேர்தல் துவங்கும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் ஏப்ரல் 24ம் தேதி தேர்தல் நடக்கும் எனவும் கூறியுள்ளது. இதையடுத்து இந்திய ரூபாயின் மதிப்பு பெரிய மாற்றம் ஏதும் இன்றி 61.85 ரூபாயாக உள்ளது. மேலும் இன்று (05-01-2014) இந்திய பங்கு சந்தைகள் ஏற்றத்தில் உள்ளன. பங்கு சந்தையின் சென்செக்ஸ் 30 புள்ளிகள் அதிகரித்து 21,240 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி 10 புள்ளிகள் அதிகரித்து 6,308 ஆக உள்ளது.
 
 
குறிப்பாக அதானி பவர் நிறுவன பங்கின் விலை 2 சதவிகிதம் அதிகரித்தும், டாடா ஸ்டீல், ஹிந்துஸ்தான் ஜிங்க் மற்றும் ஜெயின் இரிகேஷன் போன்ற நிறுவன பங்குகளின் விலை தலா 1 சதவிகிதம் அதிகரித்தும் உள்ளது.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close