Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அஞ்சலக நிரந்தர வைப்புநிதி சேமிப்பு திட்டம்: வட்டி விகிதம் 0.2% உயர்வு!

வருகின்ற நாடளுமன்ற மக்களவை தேர்தல் ஏபரல் 7ம் தேதி முதல் துவங்கும் என்று தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. இந்த நிலையில் அஞ்சலகங்களில் சேமிப்புக்காக வைக்கப்படும் நிரந்தர வைப்புநிதிக்கு வட்டி விகிதத்தை 0.2 சதவிகிதம் மத்திய அரசு உயர்த்தியள்ளது. அதேசமயம் பி.பி.எஃப். வட்டி விகிதம் மாற்றம் ஏதும் செய்யப்படாமல் 8.7 சதவிகிதமாகவே உள்ளது. 
 
இந்த திட்டத்தின் அதிகபட்ச முதலீட்டு தொகையில் எந்த விதமான மாற்றமும் இல்லை. மேலும் சிறுசேமிப்பு  திட்டங்களின் வட்டி விகித உயர்வு வருகிற ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஒன்று, இரண்டு ஆண்டுகளுக்கான ஃபிக்ஸ்ட் டெபாசிட்ட வட்டி 8.2 சதவிகிதத்திலிருந்து 8.4 சதவிகிதமாகவும், மூன்றாண்டு மற்றும் ஐந்தாண்டு நிரந்தர வைப்புநிதி திட்டங்களுக்கு 0.1 சதவிகிதம் வட்டி உயர்த்தி 8.5 சதவிகிதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல ஐந்தாண்டு ஆர்.டி. திட்டங்களுக்கான வட்டி விகிதமு 8.3 சதவிகிதத்திலிருந்து 8.4 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 
 
 
5,10 ஆண்டுகளுக்கான என்.எஸ்.சி. முதலீடுகளுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் செய்யாமல்  8.5 சதவிகிதமாகவும், 8.8 சதவிகிதமாகவே உள்ளது. மேலும் ஐந்து வருட மாத வருமான திட்டத்திற்கான  (எம்.ஐ.எஸ்) வட்டி விகிதம் 8.4 சதவிகிதமாக அப்படியே உள்ளது. இதேபோல சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதமும் 4 சதவிகிதமாகவே உள்ளது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ