Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நடப்பு கணக்கு பற்றாக்குறை 4.2 பில்லியன் டாலராக குறைந்தது!

 
நடப்பு நிதியாண்டில் மூன்றாவது காலாண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 4.2 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. இது கடந்த இரண்டாவது காலாண்டில் 5.2 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவே கடந்த 2012-13ம் நிதியாண்டில் இதேகாலாண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 31.9 பில்லியன் டாலராக இருந்தது. 
 
 
இந்த வளர்ச்சிக்கு காரணம் கடந்த மூன்றாவது காலாண்டில் ஏற்றுமதி 7.5 சதவிகிதம் அதிகரித்து 79.8 பில்லியனாக அதிகரித்துள்ளது. குறிப்பாக பொறியியல் பொருட்கள், ரெடிமேட் ஆடை ஏற்றுமதி, தாது, கடல் சார்ந்த பொருட்கள் மற்றும் கெமிக்கல்ஸ் போன்ற பொருட்கள் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. மறுபுறம் வியபாரபொருட்கள் இறக்குமதி 14.8 சதவிகிதம் குறைந்து 79.8 பில்லியன் டாலருக்கு மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதுவே முந்தைய ஆண்டின் மூன்றாவது காலாண்டில் இறக்குமதி 10.4 சதவிகிதம் அதிகமாகவே இருந்தது. 
 
குறிப்பாக கடந்த மூன்றாவது காலாண்டில் தங்க இறக்குமதியை குறைக்க தங்கம் இறக்குமதி வரி 2 சதவிகிதத்திலிருந்து 10 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டதும், இறக்குமதி செய்யப்படும் தங்கத்தில் 20 சதவிகிதம் தங்கத்தை கட்டாயமாக ஏற்றுமதி செய்யவேண்டும் போன்ற பல விதிமுறைகளை மத்திய அரசு விதித்தது. இதனால் கடந்த மூன்றாவது காலாண்டில் தங்கம் இறக்குமதி வெகுவாக குறைந்து 3.1 பில்லியன் டாலராக குறைந்தது. இது கடந்த இரண்டாவது காலாண்டில் 3.9 பில்லியன் டாலராக இருந்தது. இதுவே முந்தைய ஆண்டின் மூன்றாவது காலாண்டில் 17.8 பில்லியன் டாலர் அளவுக்கு இருந்தது.    
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close