Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ், நிஃப்டி புதிய உச்சம்!

இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை 4.2 பில்லியன் டாலராக குறைந்துள்ளது என்ற செய்திகள் வெளியானதையடுத்து, இன்று (06-01-2014) இந்திய ரூபாயின் மதிப்பு 61.19 ரூபாயாக அதிகரித்துள்ளது. மேலும் இதனால் பங்கு சந்தைகள் ஏற்றத்தில் உள்ளன. மேலும் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இரண்டு சந்தைகளுமே புதிய உச்சத்தில் உள்ளன. பங்கு சந்தையின் சென்செக்ஸ் 192 புள்ளிகள் அதிகரித்து 21,469 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி 60 புள்ளிகள் அதிகரித்து 6,389 ஆக உள்ளது.
 
 
குறிப்பாக பர்ஸ்வநாத் நிறுவன பங்கின் விலை 3 சதவிகிதம் அதிகரித்தும், ஜெயின் இரிகேஷன் நிறுவன பங்கின் விலை 2 சதவிகிதம் அதிகரித்தும், அதானி பவர், டாடா ஸ்டீல், பெட்ரோநெட் போன்ற நிறுவன பங்குகளின் விலை தலா 1 சதவிகிதம் அதிகரித்தும் உள்ளது.

 

 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ