Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ், நிஃப்டி புதிய உச்சம்!

இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை 4.2 பில்லியன் டாலராக குறைந்துள்ளது என்ற செய்திகள் வெளியானதையடுத்து, இன்று (06-01-2014) இந்திய ரூபாயின் மதிப்பு 61.23 ரூபாயாக அதிகரித்துள்ளது.  இதனால் இந்திய பங்கு சந்தைகள் புதிய உச்சத்தை அடைந்து ஏற்றத்தில் முடிவடைந்தன. சென்செக்ஸ் 237 புள்ளிகள் அதிகரித்து 21,513 ஆக முடிவடைந்தது. இதேபோல் நிஃப்டி 72 புள்ளிகள் அதிகரித்து 6,401 ஆக முடிவடைந்தது.
 
 
குறிப்பாக பர்ஸ்வநாத் நிறுவன பங்கின் விலை 3 சதவிகிதம் அதிகரித்தும், ஜெயின் இரிகேஷன், டாடா ஸ்டீல் போன்ற நிறுவன பங்குகளின் விலை தலா 2 சதவிகிதம் அதிகரித்தும், அதானி பவர், பெட்ரோநெட் எல்.என்.ஜி போன்ற நிறுவன பங்குகளின் விலை தலா 1 சதவிகிதம் அதிகரித்தும் முடிவடைந்தது.  
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ