Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்செக்ஸ், நிஃப்டி தொடர்ந்து புதிய உச்சம்!

வரும் நாடளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், கூட்டணி கட்சிகள் அமைத்து அதன் மூலம் நல்லதொரு ஆட்சி அமையும் என்று எதிர்பார்ப்பின் காரணமாக, இந்திய பங்கு சந்தைகள் ஏற்றத்தில் உள்ளன. இதேபோல் இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த இரண்டரை மாதங்களில் இல்லாத அளவுக்கு 61.05 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதையடுத்து இன்று (07-03-2014) சென்செக்ஸ் 222 புள்ளிகள் அதிகரித்து 21,736 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி 68 புள்ளிகள் அதிகரித்து 6,469 ஆக உள்ளது. 
 
 
குறிப்பாக எல் அன்ட் டி நிறுவன பங்கின் விலை 6 சதவிகிதம் அதிகரித்தும், எஸ்.பி.ஐ வங்கியின் பங்கு விலை 4 சதவிகிதம் அதிகரித்தும், டாடா ஸ்டீல் மற்றும் அதானி பவர் போன்ற நிறுவன பங்குகளின் விலை தலா 1 சதவிகிதம் அதிகரித்தும் உள்ளது.  
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close