Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 405 புள்ளிகள் ஏற்றம்!

வரும் நாடளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, வர்த்தகர்கள் நல்லதொரு ஆட்சி அமையும் என்ற எதிர்பார்பிலேயே கடந்த வாரம் பங்கு சந்தைகள் ஏற்றத்தில் இருந்தன. இதையடுத்து பங்கு சந்தைகள் நல்ல ஏற்றம் கண்டதையடுத்து அன்னிய நிதி நிறுவன முதலீடுகள் அதிகரித்துள்ளன, இதனால் ரூபாயின் மதிப்பு சுமார் 61.07 ரூபாய் வரை சென்றது. இதையடுத்து இன்று (07-03-2014) இந்திய பங்கு சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்தன. பங்கு சந்தையின் சென்செக்ஸ் 405 புள்ளிகள் அதிகரித்து 21,919 ஆக முடிவடைந்தது. இதேபோல் நிஃப்டி 125 புள்ளிகள் அதிகரித்து 6,526 ஆக முடிவடைந்தது. 
 
 
குறிப்பாக அதானி பவர் நிறுவன பங்கின் விலை 6 சதவிகிதம் அதிகரித்தும், பேங்க் ஆப் பரோடா நிறுவன பங்குகளின் விலை 5 சதவிகிதம் அதிகரித்தும், எஸ்.பி.ஐ வங்கியின் பங்கு விலை 4 சதவிகிதம் அதிகரித்தும், பஞ்சாப் நேஷனல் வங்கியின் பங்கு விலை 3 சதவிகிதம் அதிகரித்தும், டாடா ஸ்டீல் நிறுவன பங்கின் விலை 1 சதவிகிதம் அதிகரித்தும் முடிவடைந்தது.  
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ