Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பணியில் சிறக்க 10 டிப்ஸ்!

இன்றைய தலைமுறையினர் தங்கள் கல்லூரி வாழ்க்கையைப் போலவே அலுவலக வாழ்க்கையும் ஜாலியாக அமைய வேண்டும் என்று நினைக்கிறார்கள். அலுவலக வாழ்க்கை என்பது கல்லூரி வாழ்க்கைக்கு நேரெதிர் என்று தெரியவரும்போது பணிகளில் காலதாமதம் ஆவது, செய்யும் பணிகளில் அலட்சியம்  காட்டுவது என்கிற சிந்தனைகளுக்கு ஆட்பட்டு கடைசியில் கெட்ட பெயரை வாங்கி விடுகிறார்கள். இதனால் அவர்களது முன்னேற்றமும் தடைபடுகிறது. இப்படி இல்லாமல் காலை முதல் மாலை வரை அலுவலகப் பணிகள் சீராக நடக்க பின்பற்ற வேண்டியவை என்னென்ன?

1. வேலைக்குச் சேர்ந்த புதிதில் செய்யும் வேலைகளில் தவறுகள் நடப்பது என்னவோ சகஜம்தான். ஆனால், அந்த தவறுகள் தொடர்கதையாகிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கவேண்டும். 
 
2. எதையுமே பிளான் பண்ணி பண்ணணும் என்று சொல்வதைப்போல, அலுவலகப் பணிகள் சீராக நடக்க திட்டமிடல் என்பது மிக மிக அவசியம். 
 
3.எந்தெந்த வேலைக்கு முதலில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமோ, அந்த வேலையை முடித்துவிட்டு அடுத்தடுத்த வேலைகளைச் செய்ய கற்றுக்கொள்ள வேண்டும். 
 
4. அலுவலகப் பணிகள் ஒன்றன்பின் ஒன்றாக சீராக நடக்க வேண்டும் என்றால், சரியான நேரத்திற்கு அலுவலகத்துக்கு வரவேண்டும். 
 
5. குழுவாகச் செயல்படும் இடங்களில் ஒருவருக்கு அதிகப் பணிச்சுமை இருக்குமானால் பிறரிடம் பணிகளை பகிர்ந்துகொள்ள வேண்டும்.
 
6. நாம் தரும் வேலையைச் சிறப்பாக செய்துமுடிப்பார் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டுமே ஒருவரிடம் வேலையை ஒப்படைக்க வேண்டும்.
 
7. தரப்படுகிற வேலையை எப்படி முடிக்க வேண்டும் என்பதை,  வேலையைத் தொடங்கும் முன்பே நன்றாக கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது.
 
8. எந்த வேலையாக இருந்தாலும் முழுஈடுபாட்டுடன் செய்ய பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். வேலையின் மீதான ஆர்வத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதேசமயம் அலுவலக நேரங்களில் அலுவலகம் சார்ந்த விஷயங்கள் இல்லாமல் வீண் அரட்டை அடிப்பதை தவிர்ப்பது நல்லது. 
 
9. ஒரு வேலைக்காக நாம் எடுத்துக்கொள்ளும் நேரம் குறித்தும், திட்டம் குறித்தும் நமக்கு நாமே ஆலோசனைகளை மேற்கொள்ள வேண்டும். கொடுக்கப்பட்டிருக்கும் வேலைகளை மட்டுமே செய்யாமல், நேரம் கிடைக்கும்போதெல்லாம் பிறருடைய வேலைகளையும் தெரிந்து வைத்துக்கொள்ளவது நல்லது. 
 
10. ஒரு வேலையை முடித்து ஒப்படைக்கும்போது நாம் சொல்லாமலே, இந்த வேலையை இவர்தான் செய்திருப்பார் என்று அவர்களே தெரிந்துகொள்ளும்படியாக நமது வேலையில் நேர்த்தி இருக்க வேண்டும். 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ