Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது எப்படி?


மியூச்சுவல் ஃபண்டில் எப்படி முதலீடு செய்வது என்பது குறித்து ப்ளூசிப் கார்ப்ரேட் இண்வெஸ்மென்ட் நிறுவனத்தின் மண்டல மேலாளர் முருகன் விளக்கினா.

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய தனியாக விண்ணப்பம் இருக்கிறது. இதை பூர்த்தி செய்து தர வேண்டும். பான் கார்டு எண்ணை விண்ணப்பத்தை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.

இதனுடன் முதலீடு செய்யும் தொகைக்கான காசோலையை இணைத்து கொடுக்க வேண்டும். முதல் முறையாக முதலீடு  இதற்கு முன் கே.ஓய்.சி. பூர்த்தி செய்வது அவசியம். கே.ஓய்.சிக்கு முகவரி சான்று, புகைப்படச் சான்று, உங்களுடைய புகைப்படம் ஆகியவற்றை கொடுத்து கே.ஓய்.சி. (நோ யுவர் கஸ்டமர்) செய்ய வேண்டும்.

கே.ஓய்.சி -ஐ பதிவுப் பெற்ற தனியார் நிதிச் சேவை நிறுவனங்கள் செய்கின்றன. கார்வி, என்.எஸ்.டி.எல், சி.டி.எஸ்.எல்., கேம்ஸ் போன்றவை கே.ஓய்.சி. செய்து தருகின்றன. இவை தவிரமியூச்சுவல் ஃபண்ட் ஏஜென்ட்களும் செய்து தருவார்கள்.

மியூச்சுவல் ஃபண்டில் 0.25 சதவிகிதம் நிர்வாக கட்டணம் இருக்கும். நீங்கள் முதலீடு செய்யும் தொகையில் நிர்வாக கட்டணம் போக மீதமுள்ள தொகையை ஃபண்டில் முதலீடு செய்வார்கள். முதலீடு செய்யும் தொகைக்கு ஏற்ப யூனிட்டுகள் உங்களின் கணக்கில் வரவு வைக்கப்படும்.

மாதம் தோறும் முதலீடு செய்வது என்றால் எத்தனை மாதங்களுக்கு முதலீடு செய்யப் போகிறீர்கள் என்பதை முதலிலே தெரிவித்துவிடலாம். அதற்கு ஏற்ப இ.சி.எஸ். கொடுக்கலாம்.

- இரா.ரூபாவதி.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ