Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வெளிநாட்டு நிறுவன முதலீடுகள் அதிகரிப்பு: கவனம் தேவை

 இந்திய முதலீட்டாளர்கள் மற்றும் வணிகர்கள் பங்கு சந்தை மற்றும் ரூபாயின் அதிகரிப்பை எண்ணி உற்சாகத்தில் இருக்கிறார்கள். உற்சாகத்தில் இருந்து கொண்டுயிருக்கும் அதே வேளையில் சற்று கவனமாக இருப்பது என்பது அவசியமாகிறது.

 
வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் மூன்றில் இரண்டு மடங்கு முதலீடுகளை நிலையற்ற பங்குகளில்  வைத்திருக்கிறார்கள். அவர்களுடைய மொத்த முதலீடுகள் தோராயமாக 250 பில்லியன் டாலர்களாகும். இது உள்நாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை காட்டிலும் பத்து மடங்கு அதிகமான முதலீடுகளாகும்.  வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் பெரும்பாலான முதலீடுகள் பல நாடுகளை இணைத்திருக்கும் முதலீடுகளாக  (a multi country kind) இருந்கின்றது. அவர்களுடையவைகள் இந்தியாவை மட்டும் இணைத்திருக்கும் முதலீடுகளில் (India dedicated funds) குறைவாக இருக்கின்றது. 
 
மேலும் கடன் சந்தையில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களுக்குண்டான    ஒதுக்கீடு அளவை அவர்களது முதலீடுகள் தொட்டுவிட்டது. மேலும் அவர்களுடைய முதலீடுகள் கடன் சந்தையில் பெரும்பாலும் குறுகிய கால அடிப்படையிலேயே  இருக்கிறது. 
 
தேர்தலில் வேறு  பலமுனை போட்டிகளாக இருப்பதால்  தேர்தல் முடிவுகள் வந்து புதிய ஆட்சி அமையும் வரை சந்தை ஏற்ற இறக்கத்துடனே காணப்படும். ஆக முதலீட்டாளர்கள் மற்றும் வணிகர்கள் சற்று நிதானத்துடன் செயல்பட வேண்டும் என்பது அவசியமாகிறது என்கிறார் ஐஃபின் நிறுவனத்தின் சீனியர் டீலர் ஸ்ரீனிவாசன். 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ