Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வருமானவரி விலக்கு உச்ச வரம்பு ரூ 6 லட்சம் : திமுக தேர்தல் அறிக்கை

சென்னையில் திமுக தேர்தல் அறிக்கையை கட்சித் தலைவர் கருணாநிதி வெளியிட்டார்.

அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

வருமானவரி விலக்கு உச்சவரம்பை ஆண்களுக்கு ரூ. 6 லட்சமாகவும், பெண்களுக்கு ரூ. 7.2 லட்சமாகவும் அதிகரிக்க வலியுறுத்தப்படும்.

தனியார் துறையில் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்க நடவடிக்கை மேற்கொள்வோம்.

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 % இடஒதுக்கீட்டுக்கு பாடுபடுவோம்.

மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வகை செய்வோம்.

சாதிவாரி கணக்கெடுப்பு கல்வி, வேலைவாய்ப்புகளில் திருநங்கைகளுக்கும் இடஒதுக்கீடு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நாடு முழுவதும் சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்துவோம்.

திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரிக்க நடவடிக்கை மேற்கொள்வோம்.

இவ்வாறு திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ