Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரைப்னாமிக்ஸ்: அமைதிக்கு வழிவகுத்த கருத்தரங்கம்!

ரைப்னாமிக்ஸ்: அமைதிக்கு வழிவகுத்த கருத்தரங்கம்!
ரம்யா

இந்தியாவின் முன்னணி மென்திறன் நிறுவனமான ரைப் குளோபல், 'ரைப்னாமிக்ஸ்’ என்ற பெயரில் சர்வதேச மனிதவள மேம்பாட்டுக் கருத்தரங்கை சென்னையில் பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கி மார்ச் 4 வரை நடத்தியது. இந்த நிகழ்வுக்கு மீடியா பார்ட்னராக நாணயம் விகடன் இருந்தது. மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய இதிகாசங்கள், அலுவலக மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைப் பிரச்னைக்கு எப்படித் தீர்வாக அமையும் என்பது பற்றி இந்தக் கருத்தரங்கில் விளக்கமாக எடுத்துச் சொல்லப்பட்டது. இந்த நிகழ்வில் மேற்கத்திய பயிற்சியாளரான வேட் ஃப்ரான்ஸன், பிரபல பயிற்சியாளர் டாக்டர் வி.விஜய் ஆனந்த் ஸ்ரீராம் ஆகியோர் முக்கியப் பயிற்சியாளர்களாக இருந்து இந்தக் கருத்தரங்கை வழிநடத்திச் சென்றனர். இந்தக் கருத்தரங்கை முதல்நாள் தமிழக ஆளுநர் கே.ரோசய்யா தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார்.

இந்தக் கருத்தரங்கில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்பின் கீழ் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.  வாழ்க்கையில் உறவுகளின் முக்கியத்து வமும், ஒவ்வொருவரும் நல்லதை நினைத்து நல்லதே செய்தால் நல்லதே நடக்கும் என்ற எண்ணத்தில் பழகினால், அவர்களுக்குள் இருக்கும் அந்த அதிர்வலைகள் உலகத்தில் அமைதியை ஏற்படுத்தும் என்றும், சமத்துவத்தின் மகத்துவமும் கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டன.

இந்தக் கருத்தரங்கின் கடைசி நாளன்று சிறப்பு விருந்தினராக சைலேந்திர பாபு ஐபிஎஸ் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசிய பேச்சு புதிய உற்சாகத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.

இந்தக் கருத்தரங்கில் ரைப் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக இயக்குநர் பி.இராமலிங்கம், இயக்குநர் பி.ஜே.வெங்கட்ராமன் மற்றும் ரைப் பயிற்சியாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

படம்: எம்.உசேன்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ