Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மோசடி நிதி நிறுவனங்களுக்கு செக்!

நிதி நிறுவனங்கள் செய்யும் மோசடி நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஒரு மோசடி நிறுவனத்தை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதற்குள், அடுத்த மோசடி நிறுவனம் இன்னொரு பெயரில் தனது லீலைகளை நடத்தத் தொடங்கிவிடுகிறது. இந்த மோசடி நிறுவனங்களுக்கு செக் வைக்கிறமாதிரி, தமிழ்நாடு பொருளாதாரக் குற்றப்பிரிவு தொலைபேசி சேவை ஒன்றை தொடங்கியுள்ளது.

இதன்மூலம் மோசடி நிறுவனங்கள் பற்றிய தகவல்களைப் பொதுமக்கள் ஆரம்பத்திலேயே தெரிந்துகொண்டு உஷாராகலாம். இதுபற்றிய முழுமையானத் தகவல்களைத் தெரிந்துகொள்ள 16.3.2014 தேதியிட்ட நாணயம் விகடனில் உள்ளது.

புகார் செய்யப்படும் கம்பெனிகள் மீது பொருளாதாரக் குற்றப்பிரிவு விசாரித்து நடவடிக்கை எடுக்கும் என பொருளாதாரக் குற்றப்பிரிவு ஏடிஜிபி பிரதீப் வி.பிலிப் தெரிவித்துள்ளார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP