Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாய்ப்புகளைக் கண்டுபிடியுங்கள்!

தலையை அடகு வைத்தாவது அமெரிக்காவுக்குப் போய்ச் சேர்ந்துவிட்டால் நிறைய சம்பாதித்துவிடலாம் என்கிற எண்ணத்தில் ஏழையொருவன், அரைவயிலும், கால்வயிறுமாகச் சாப்பிட்டுச் சேர்த்தப் பணத்தில் கப்பல் ஏறுகிறான்.



கப்பலேறியவுடன் அதில் இருக்கின்ற லைஃப் ஜாக்கெட்டை போட்டுக்கொண்டு ஒரு மூலையில் உட்கார்ந்தான்.  தன் பையில் இருந்த உணவுப் பொட்டலத்தை அவ்வப்போது எடுத்துச் சாப்பிட்டான்.

கப்பலில் பயணம் செய்யும் மற்றவர்கள் ஆடிப்பாடி, கேளிக்கைகளில் ஈடுபட்டு கப்பலில் தரப்பட்ட சுவையான உணவை உண்டுகளித்து, இரவு தங்கள் அறைக்குச் சென்று உறங்கி மகிழ்ச்சியுடன் இருந்தார்கள்.

நான்கு நாட்கள் பயணம் முடிந்து அமெரிக்க துறைமுகத்தில் அனைவரும் இறங்கும்போது கப்பலின் அதிகாரி ஒருவர் அந்த ஏழையிடம் ''இந்தப் பயணம் முழுக்க நான் உங்களைக் கவனித்தேன், நீங்கள் ஏன் ஒரு மூலையில் உட்கார்ந்தே இருந்தீர்கள்? கப்பலில் தரப்பட்ட உணவைக்கூட சாப்பிடவில்லையே?'' என்று கேட்டார்-.

'' என்னிடம் டிக்கெட் வாங்கத்தான் காசு இருந்தது. ரூம் போடவோ (கப்பலில்), சாப்பிடவோ காசு இல்லை. அதனால்தான் சாப்பாடு கட்டிக்கொண்டுவந்து ஒரு மூலையில் உட்கார்ந்துவிட்டேன்'' என்றாராம்.

''அடப்பாவி! கப்பல் பயண டிக்கெட்டின் விலை, ரூம் மற்றும் சாப்பாட்டை உள்ளடக்கியது என்று உனக்குத் தெரியாதா?'' என்று அவர் கேட்க, திகைத்துப்போய் '' என் அதிர்ஷ்டம் அவ்வளவுதான்'' என்று சொல்லியபடி கப்பலைவிட்டு இறங்கினான் அந்த ஏழை மனிதன்.

நம்மில் பெரும்பாலானவர்கள் கப்பலில் பயணித்த அந்த ஏழையைப்போலவே, நமக்கு உரியவற்றை உலகத்திலிருந்து பெற்றுக்கொள்ளும் விவரமில்லாமல் நம் பயணத்தை முடித்துவிடுகிறோம். வாய்ப்புகள் நிறைந்த இந்த உலகத்தில் நமக்கேற்ற வாய்ப்புகளை கண்டறிந்து செயலாக்கினால் நாம் அனைவருமே வசதி வாய்ப்புடன் வாழமுடியும்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ