Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சோதனை எப்படியெல்லாம் வருது பாருங்க..!

கேள்வி: என் பூர்வீக சொத்தில், ஒரு பகுதியை விற்றேன். அந்த இடத்துக்குப் பட்டா வாங்கியவர், நான் விற்காத இடத்துக்கும் சேர்த்து பட்டா வாங்கிவிட்டார்.  இதை எப்படி சரி செய்வது?
ஜானகிராமன், கூடுவாஞ்சேரி, சென்னை.



பதில்: விற்கப்படாத நிலத்துக்கு பட்டா வாங்கியது சட்டப்படி தவறான செயலாகும். மொத்த நிலத்துக்கான பட்டா, விற்பனை செய்த ஒரு பகுதி நிலத்தின் கிரய பத்திரம்,  விற்பனை செய்யாத இடத்துக்கும் சேர்த்து தவறுதலாக வழக்கப்பட்ட பட்டாவின் நகல் ஆகியவற்றைச் சேர்த்து ஒரு மனுவை தாசில்தாரிடம் தரவேண்டும்.

அந்த மனுவில் விற்பனை நிலத்தின் உரிமை உங்களுக்கு மட்டும்தான் உள்ளது என்றும், எந்தவிதமான அறிவிப்பு இல்லாமலும், விசாரணை செய்யாமலும் தரப்பட்ட பட்டாவை ரத்து செய்து, மீண்டும் உங்களது பெயருக்கே பட்டா வழங்குமாறு மனுவில் குறிப்பிட வேண்டும்.

நீங்கள் தரும் இந்த மனுவை விசாரணை செய்யவேண்டியது தாசில்தாரின் கடமை. மனுவை, தாசில்தார் வாங்க மறுத்தாலோ,  மனுவின் மீதான விசாரணையை காலதாமதம் செய்தாலோ மாவட்ட ஆட்சியரிடம் முறையீடு செய்யலாம் அல்லது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யலாம்.
வழக்கறிஞர் என்.ரமேஷ், சென்னை.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ