Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அதிர்ஷ்டம் யாரைத் தேடி வரும்?

திறமை, துணிவு, செயல், புதுமை எனப் பல விஷயங்கள் பணம் சம்பாதிக்கத் தேவையானவை என்று நம்முடைய மூளை சொன்னாலுமே ஒவ்வொருமுறை நாம் முயற்சிகளைச் செய்து தோல்வியைச் சந்திக்கும்போதும் சரி, எதிர்பார்த்த வெற்றியை பெறாதபோதும் சரி, அதிர்ஷ்டமும் பணம் சம்பாதிக்கத் தேவையான ஒன்றே என்ற கட்டாய முடிவுக்கு சென்றுவிடுகிறோம்.

அதிர்ஷ்டசாலிகள் அவர்கள் வாழ்வில் பலசமயம் அவர்களுக்கு நன்மை தரக்கூடிய வல்லமையுள்ள நபர்களையே சந்திக்கின்றனர். துரதிர்ஷ்டசாலிகளோ பலன்தரும் வாய்ப்புகளை எதிர்கொள்வதில்லை. மாறாக, அவர்களுக்கு கெடுதல் தரக்கூடிய விளைவுகளை உருவாக்கும் வல்லமையுடைய நபர்களையே சந்திக்கின்றனர்.

அதிர்ஷ்டசாலிகள் வாய்ப்புகளைக் கண்டுபிடிப்பதிலும், உருவாக்கிக்கொள்வதிலும், அதைச் செயலாக்குவதிலும் முனைப்பாகச் செயல்படுகின்றனர். கண்ணில் அவர்களுக்கு ஏற்படும் துரதிர்ஷ்ட நிகழ்வுகளில்கூட அதிலிருக்கும் நன்¬மான் தெரிகின்றது. இதனால் அவர்கள் தங்கள் முயற்சியில் சோர்வடைவதுமில்லை, தப்பித்தவறி கெட்டவிஷயங்கள் நடந்தால்கூட அது நன்மைக்கே என்று கொள்வதில்தான் அதிர்ஷ்டசாலிகளின் நீண்டகால வெற்றியின் ரகசியமே அடங்கியுள்ளது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close