Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தங்கம் இறக்குமதி மீதான அடிப்படை விலை மீண்டும் உயர்வு!

சர்வதேச சந்தை விலையில் தங்கத்தின் விலை அதிக அளவு ஏற்ற இறக்கத்துடன் காணப்படுவதால் இறக்குமதி மீதான அடிப்படை விலையை மத்திய அரசு 2.77 சதவிகிதம் உயர்த்தியுள்ளது.
சில நிறுவனங்கள் இறக்குமதி செய்யும் பொருட்களின் விலையை குறைத்து காட்டி வரி ஏய்ப்பு செய்கின்றன. இதனை தடுக்கும் வகையில் தங்கம், வெள்ளி உள்ளிட்ட முக்கிய பொருள்களின் இறக்குமதிக்கான அடிப்படை விலையை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை மத்திய அரசு நிர்ணயம் செய்கிறது. தங்கம் இறக்குமதி மீதான அடிப்படை விலை இப்போது 433 டாலரிலிருந்து (10 கிராம்) 445 டாலராக உயர்த்தப்பட்டுள்ளது. அதேசமயம், வெள்ளி இறக்குமதி மீதான அடிப்படை விலை 699 டாலரிலிருந்து (ஒரு கிலோ) 694 டாலராக குறைக்கப்பட்டுள்ளது. மத்திய கலால் மற்றும் சுங்க வரிகள் வாரியம் இது தொடர்பான அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
 
பிப்ரவரி மாதத்தில் ஏற்றுமதி 3.67 சதவிகிதம் குறைந்து 2,568 கோடி டாலராக சரிவடைந்துள்ளது. அதேசமயம், இறக்குமதி 17 சதவிகிதம் குறைந்து 3,381 கோடி டாலராக குறைந்துள்ளது. இதனையடுத்து அம்மாதத்தில் வர்த்தக பற்றாக்குறை 813 கோடி டாலராக கணிசமாக குறைந்துள்ளது. தங்கம், வெள்ளி இறக்குமதி 71 சதவிகிதம் குறைந்து 163 கோடி டாலராக குறைந்ததே இதற்கு முக்கிய காரணம் என்று நிதி அமைச்சகம் கூறியுள்ளது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ