Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஷேர்லக் - ரான்பாக்ஸியை பாதித்த கலப்பட மருத்து !

''பிஏசிஎல் நிறுவனம் சிபிஐ வலையில் மாட்டி இருப்பதை முன்பே சொன்னேன். இந்த வாரம் கனஜோராக கவர் ஸ்டோரி பண்ணிவிட்டீரே! இதையெல்லாம் படித்துவிட்டு, நம் மக்கள் விழிப்பு உணர்வு அடையவேண்டும். அரசினால் அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பான முதலீடுகளை மட்டுமே நாடவேண்டும் என்பது என் வேண்டுகோள்'' என்றபடி நம் கேபினுக்குள் நுழைந்தவரை உட்காரவைத்து ஒவ்வொரு கேள்வியாக கேட்க ஆரம்பித்தோம்.

''ரான்பாக்ஸி பங்கின் விலை வியாழக்கிழமை மட்டும் 5% வீழ்ச்சிக் கண்டுள்ளதே?''

''இந்த நிறுவனத்தின் கொலஸ்ட்ரால் குறைப்பு மாத்திரையில் கலப்படம் செய்யப்படுவதாக தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கில் சுப்ரீம் கோர்ட், ரான்பாக்ஸிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த கொலஸ்ட்ரால் மருந்து விற்பனை தடை செய்யப்பட்டால், இந்த நிறுவனத்தின் ஆண்டு வருமானத்தில் 76 கோடி ரூபாய் குறையும். இதன் எதிரொலியாகத்தான் பங்கின் விலை வீழ்ச்சியடைந்தது. இந்த நிறுவனத்தின் மருந்துத் தயாரிப்பு தொழிற்சாலைகள் மீது அமெரிக்காவின் எஃப்.டி.ஏ ஏற்கெனவே பல கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில் சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் ரான்பாக்ஸிக்கு கூடுதல் சிக்கலை உருவாக்கியிருக்கிறது. அந்த வகையில் இந்தப் பங்கில் சற்று யோசித்து முதலீடு செய்வது நல்லது.''  

''யுனிடெக் - எல்ஐசி பிரச்னை பெரிதாகி கொண்டிருக்கிறதே?''

''வாங்கிய 150 கோடி ரூபாய் கடனை திருப்பித் தராததால் யுனிடெக்-ன் நொய்டா மற்றும் கூர்கான் சொத்துகளை எல்ஐசி எடுத்துக் கொள்ளும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இந்தத் தகவல் வெளியே கசிந்தவுடனேயே இந்தப் பங்கின் கடந்த 30 நாள் சராசரி விலையைவிடக் குறைந்திருக்கிறது''.

''ஹெச்டிஎஃப்சி பங்கின் விலை 52 வார உச்சத்தைத் தொட்டிருக்கிறதே?''

''உண்மைதான். ஆனால், இதனைப் பயன்படுத்தி அந்த நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் கணிசமான லாபத்தைப் பார்த்திருக்கிறார்கள். சுமார் 20 மூத்த அதிகாரிகள், மூன்று தினங்களில் மட்டும் பங்கின் விலை உச்சத்தில் இருந்தபோது சுமார் 32 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை விற்று லாபம் பார்த்திருக்கிறார்கள். விவரமான ஆட்கள்தான்!''

''முன்னணி சாஃப்ட்வேர் நிறுவனமான இன்ஃபோசிஸ் பங்கு விலை ஒரேநாளில் 9% வீழ்ச்சிகண்டுள்ளதே?''

''இதற்கு முக்கிய காரணம், 'இன்ஃபோசிஸ் சி.இ.ஓ எஸ்.டி.ஷிபுலால், வாடிக்கை நிறுவனங்கள் தொழில்நுட்பத்துக்கு அதிக தொகையை செலவிடத் தயங்குவதால் வருகிற காலாண்டில் வருமானம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது’ என்று கருத்து தெரிவித்ததுதான். ஆனால், பெரும்பாலான பங்குச் சந்தை நிபுணர்கள் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்கு விலை இன்னும் உயரும் என்று நம்பிக்கைத் தெரிவித்திருக்கிறார்கள். வருகிற 2015-ம் ஆண்டு இறுதிக்குள் இன்ஃபோசிஸ் பங்கொன்றின் விலை சுமார் 4500 ரூபாயைத் தொடும் என்று சொல்லியிருக்கிறார்கள்''.

''பணவீக்க விகிதம் கடந்த ஒன்பது மாதங்களில் மிகவும் குறைந்துள்ளதே?''

''பிப்ரவரி மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 4.68 சதவிகிதமாக குறைந்துள்ளது. காய்கறிகளின் விலையும் கணிசமாக குறைந்துள்ளது. இந்த நிலையில் வருகிற ஏப்ரல் 1-ம் தேதி அன்று நடக்க இருக்கும் நிதிக் கொள்கைக் கூட்டத்தில் ஆர்.பி.ஐ. வட்டி விகிதத்தைக் குறைக்குமா என்று சந்தேகத்தைக் கிளப்புகிறார்கள் அனலிஸ்ட்கள். ஆனால், எல்நினோ காரணமாக, இந்த ஆண்டில் பருவமழை தவறுவதற்கு வாய்ப்பிருப்பதாகவும் சொல்கிறார்கள். தேர்தலுக்கு பிறகாவது வட்டி விகிதத்தை ஆர்.பி.ஐ. குறைக்கிறதா என்று பார்ப்போம்.''

''பத்திரிகைகளைப் புரட்டினாலேயே ஒரே சிபிஐ மயமாகவே இருக்கிறதே?''

 

மேலும் வாசிக்க விற்பனையில் இருக்கும் நாணயம் விகடனை வாங்கி படியுங்கள்!

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ