Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அதிகரிக்கும் வாராக்கடன்: ரூ.5,000 கோடி கடன் மறுசீரமைப்பு

கடந்த டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில், 200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் மொத்த கடனில் 5.73 சதவிகிதம் வாராக்கடனாக உள்ளது என இவ்வங்கி கூறியுள்ளது. மேலும் இந்த வாராக்கடனில் சுமார் 5,000கோடியை மறு சீரமைக்க போவதாகவும் தெரிகிறது. 

அதாவது கடந்த டிசம்பர் காலாண்டில் மட்டும் புதிய வாராக்கடன்களாக ரூ.11,400 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த ரூ.11,400 கோடி வாராக்கடனில் குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட வாராக்கடன் ரூ.9,500 கோடியாகும். மேலும் இதோடு மொத்த வாராக்க்டன் 67,799 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த வாராக்கடன் அதிகரிப்பால் கடந்த டிசம்பர் காலாவிடில் நிகர லாப்ம் 34 சதவிகிதம் குறைந்து 2,234 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது முந்தைய காலாண்டில் 2,766 கோடி ரூபாயாக இருந்தது.   
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ