Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் தொடர் ஏற்றம்!

கடந்த சில வாரங்களாக ஏற்றத்தை கண்ட இந்திய பங்கு சந்தைகள், இந்தியாவில் ந்டப்பு கணக்கு பற்றாக்குறை குறைந்து பொருளாதாரம் வளர்ந்து வரும் இந்நிலையில், வரும் நாடாளூமன்ற தேர்தலில் சரியானதொரு ஆட்சி அமையும். இதனால் பொருளாதாரம் நன்கு வளர்ச்சி அடையும் என்ற ஊகத்தின் அடிப்படையில் இந்திய பங்கு சந்தைகள் ஏற்றத்தில் உள்ளன. இதையடுத்து நடப்பு கணக்கு பற்றாக்குறை குறைந்து ஏற்றுமதி அதிகரித்துள்ளது. அதே சமயம் இறக்குமதி குறைந்துள்ளது. குறிப்பாக தங்கம் வெள்ளி இறக்குமதி வெகுவாக குறைந்துள்ளதே இதற்கு காரணம் என அறிக்கைகள் கூறுகின்றன. இன்று (18-03-2013) அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 60.93 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதனால் பங்கு சந்தையின் சென்செக்ஸ் 175 புள்ளிகள் அதிகரித்து 21,983 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி 54 புள்ளிகள் அதிகரித்து 6,558 ஆக உள்ளது. 
 
 
குறிப்பாக வங்கித்துறை பங்குகள் நல்ல ஏற்றத்தில் உள்ளன. பஞ்சாப் நேஷனல் பேங்க், பாங்க் ஆப் பரோடா, எஸ்.பி.ஐ, அதானி பவர் மற்றும் ஜெயின் இரிகேஷன் போன்ற வங்கி மற்றும் நிறுவன பங்குகளின் விலை தலா 2 சதவிகிதம் அதிகரித்தும், டாடா ஸ்டீல், ஹிந்துஸ்தான் ஜிங்க் மற்றும் பெர்ஜர் பெயின்ட்ஸ்  போன்ற நிறுவன பங்குகளின் விலை தலா 1 சதவிகிதம் அதிகரித்தும் உள்ளது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP