Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தங்கம் இருப்பு 15% சரிவு!

ரிசர்வ் வங்கியின் அன்னியச் செலாவணி கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு கடந்த ஆண்டு மார்ச் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதங்களில் 15 சதவிகிதம் சரிவடைந்துள்ளது.
 
இந்தியாவின் அன்னியச் செலாவணி கையிருப்பில் பவுண்டு, யூரோ, யென் போன்ற இதர நாட்டு செலாவணிகள், தங்கம், எஸ்.டீ.ஆர். மற்றும் பன்னாட்டு நிதியத்திடம் வைக்கப்பட்டுள்ள நிதி ஆகியவை இடம் பெற்றுள்ளது. இதில் குறிப்பாக தங்கத்தின் பங்கு 8 சதவிகிதமாக உள்ளது.
 
 
2013& மார்ச் மாதத்தில் ரிசர்வ் வங்கியின் கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு 2,569.20 கோடி டாலராக இருந்தது. இதன் மதிப்பு செப்டம்பர் மாதத்தில் 15 சதவிகிதம் சரிவடைந்து 2,176.50 கோடி டாலராக  குறைந்துள்ளது. ரிசர்வ் வங்கியிடம் மொத்தம் 557.80 டன் தங்கம் உள்ளது. இதில் 265.50 டன் தங்கம் பேங்க் ஆஃப் இங்கிலாந்து, பேங்க் ஃபார் இன்டர்நேஷனல் செட்டில் மெண்ட்ஸ் ஆகிய வெளிநாட்டு வங்கிகளிடம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ