Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிபிஎஸ்இ இடிஎஃப்: யாருக்கு ஏற்றது?

சிபிஎஸ்இ இடிஎஃப்: யாருக்கு ஏற்றது?

- வித்யா பாலா, ஃபண்ட்இந்தியா டாட்காம்

பொதுத் துறை (பிஎஸ்யூ) இடிஎஃப், புதிய ஃபண்ட் வெளியீடு மார்ச் 18ம் தேதி ஆரம்பித்தது.

இந்த ஃபண்டை கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம் நிர்வகிக்கிறது. இது ஒரு ஓப்பன் எண்டட் ஃபண்ட்.

இதன் மூலம் திரட்டப்படும் தொகை பொதுத் துறையை சேர்ந்த எனர்ஜி (59%), ஃபைனான்ஷியல் சர்வீசஸ் (14%), மெட்டல் (18%), சேவை (6%), தொழிற்துறை உற்பத்தி (2%), கட்டுமானம் (1%) ஆகிய துறைகளில் பிரித்து முதலீடு செய்ய இருக்கிறது.

       வித்யா பாலா

இதில் முதலீடு செய்யும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் என்எஃப்ஓவில் 5% தள்ளுபடி வழங்கப்படும்.

முதல் முறையாக தனது முதலீட்டை துவங்கும் பங்கு முதலீட்டாளர்கள் ராஜீவ் காந்தி ஈக்விட்டி சேவிங்ஸ் ஸ்கீம் திட்டத்தின் கீழ் இந்த ஃபண்டில் முதலீடு செய்து வரிச் சலுகை பெறலாம். இதில் முதலீடு செய்து ஓராண்டு வரை மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களை விற்காமல் இருக்கும்பட்சத்தில் முதலீட்டாளர்கள் வைத்திருக்கும் 15 யூனிட்களுக்கு ஒரு ஊக்க யூனிட்கள் வீதம் கணக்கிட்டு வழங்கப்படும்.
இதன் யூனிட்கள் என்எஸ்இ மற்றும் பிஎஸ்இ&ல் பட்டியலிடப்படும்.

இந்த முதலீட்டிற்கு நுழைவு மற்றும் வெளியேறும் கட்டணம் கிடையாது. குறைந்தபட்ச முதலீடு 5,000 ரூபாய்.

பொதுத்துறை நிறுவனங்கள், பவர் மற்றும் ஆயில் நிறுவனங்களில் முதலீடு செய்ய நினைத்திருப்பவர்கள் இந்த முதலீட்டையும் தேர்வு செய்யலாம்.

இந்த ஃபண்டின் போர்ட்ஃபோலியோவில் இடம் பெற்றப் போகும் பங்குகளின் சராசரி டிவிடெண்ட் யீல்டு 3.77%. நிஃப்டி பங்குகளின் டிவிடெண்ட் யீல்டு 1.49 சதவிகிதமாக இருக்கிறது.


மேலும் என்.எஃப்.ஓவில் 5% தள்ளுபடி, 6.6% ஊக்க யூனிட்களை கவனிக்கும் போது, இந்த ஃபண்ட நல்ல லாபத்தை தரும் என எதிர்பார்க்கலாம்.

மார்ச் 21 -ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ