Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தங்கம் இறக்குமதி செய்ய தனியார் வங்கிகளுக்கு அனுமதி!

 
கடந்த வருடம் நடப்பு கணக்கு பற்றாக்குறை காரணமாக ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. குறிப்பாக தங்கம் இறக்குமதிக்கு தடை விதித்தது. மேலும் தங்கத்தின் இறக்குமதி மீதான வரியை 2 சதவிகிதத்திலிருந்து 10 சதவிகிதமாக அதிகரித்தது. குறிப்பாக இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் 20 சதவிகிதம் கட்டாயம் ஏற்றுமதி செய்ய வேண்டும் போன்ற விதிமுறைகளை விதித்தது. ஆனால் தற்போது நடப்பு கணக்கும் கட்டுக்குள் வந்துள்ளது. மேலும் ஏற்றுமதி அதிகரித்து இறக்குமதி குறைந்துள்ளது. இதையடுத்து 5 தனியார் துறை வங்கிகளுக்கு தங்கம் இறக்குமதி செய்ய ரிசவ் வங்கி அனுமதி அளித்துள்ளது. குறிப்பாக ஹெச்.டி.எஃப்.சி, ஆக்ஸிஸ் பேங்க், கோடாக் மஹிந்திரா பேங்க், இண்டஸ்இந்த் பேங்க் மற்றும் யெஸ் பேங்க் போன்ற வங்கிகள் இதில் அடங்கும். 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close