Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தங்கம் இறக்குமதி 800-850 டன்னாக குறையலாம்!

 
நடப்பு கணக்கு பற்றாக்குறை காரணமாக தங்கத்தின் இறக்குமதி மீதான வரியை 2 சதவிகிதத்திலிருந்து 10 சதவிகிதமாக அதிகரித்தது. குறிப்பாக இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் 20 சதவிகிதம் கட்டாயம் ஏற்றுமதி செய்ய வேண்டும் போன்ற விதிமுறைகளை விதித்தது. ஒரு கட்டத்தில் தங்கம் இறக்குமதி தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்போது நடப்பு கணக்கும் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், ஏற்றுமதி அதிகரித்து இறக்குமதியும் குறைந்துள்ளது. இந்நிலையில் தற்போது ஆர்.பி.ஐ சில தனியார் வங்கிகளுக்கு தங்கம் இறக்குமதி செய்ய அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தல் முடிந்து நல்லதொரு ஆட்சி அமையும் பட்சத்தில் தங்கம் இறக்குமதி 800&850 டன்கள் இருக்கலாம் என்றும், இது கடந்தாண்டு 950 டன்கள் இருந்தது என்றும் ஆல் இந்தியா ஜெம்ஸ் அண்ட் ஜீவல்லரி டிரேடு ஃபெடரேஷன் அறிக்கையில் கூறியுள்ளது.  
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ