Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நிஃப்டி, சென்செக்ஸ் புதிய உச்சம்!

கடந்த சில வாரங்களாக தொடர் ஏற்றத்தை கண்டு வந்த இந்திய பங்கு சந்தைகள் இன்று (24-03-2014) அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 60.77 ரூபாயாக அதிகரித்ததையடுத்து, இந்திய பங்கு சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்தன. பங்கு சந்தையின் சென்செக்ஸ் 300 புள்ளிகள் அதிகரித்து 22,055 ஆக முடிவடைந்தது. இதேபோல் நிஃப்டி 88 புள்ளிகள் அதிகரித்து 6,583 ஆக முடிவடைந்தது.
 
 
 குறிப்பாக அதானி பவர்,பாங்க் ஆப் பரோடா, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா போன்ற நிறுவன மற்றும் வங்கி பங்குகளின் விலை தலா 1 சதவிகிதம் அதிகரித்தும், பெர்ஜர் பெயின்ட்ஸ் போன்ற நிறுவன பங்குகளின் விலை தலா 2 சதவிகிதம் அதிகரித்தும், பஞ்சாப் நேஷனல் பேங்க் பங்கின் விலை 3 சதவிகிதம் அதிகரித்தும் முடிவடைந்தது. அதேசமயம் ஃபைனான்ஷியல் டெக் நிறுவன பங்கின் விலை 3 சதவிகிதம் குறைந்தும் முடிவடைந்தது. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ