Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அதிகம் பயன்படுத்தப்படும் பாஸ்வேர்டு

நம் பாஸ்வேர்டுகளை மற்றவர்கள் கணிக்க முடியாதபடி வைத்துக் கொண்டால் மட்டுமே அது பாதுகாப்பானதாக இருக்க முடியும்.

நம் பெயர், குழந்தை மற்றும் மனைவி பெயர் ஆகியவற்றிலும், பிறந்த நாள், திருமண நாள் ஆகியவற்றை இணைத்தும் இருந்தால், நம்மிட மிருந்து தனிப்பட்ட தகவல்களை வாங்கி, பாஸ்வேர்டைக் கண்டுபிடித்துவிடுவார்கள். இந்த வழியில் இயங்கி, தனிப்பட்ட தகவல்களைத் திருடும் கூட்டம், இணையத்தில் நிறைய உள்ளது.

தற்போது 123456 என்ற பாஸ்வேர்டு தான் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் பாஸ்வேர்டுகளில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் password உள்ளது. அடுத்த மூன்றாவது இடத்தில் 12345678. அடுத்த இடங்களில், qwerty மற்றும் abc123 ஆகியவை உள்ளன. இது போல பாஸ்வேர்டுகளைப் பயன் படுத்துவது மிகவும் ஆபத்தானது.
 

மற்றவர்கள் யோசிக்க முடியாத அளவுக்கு கலவையாக பாஸ்வேர்டு வைத்துக் கொள்வது நல்லது.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close