Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஷேர்லக் - 12 மாதத்துக்குள் நிஃப்டி 7600

'தேர்தல் களம் சூடு பிடித்துவிட்டது. பிசினஸ் செய்திகளுக்கு இப்போது பெரிய முக்கியத்துவம் இல்லை. ஆனால், ஷேர் மார்க்கெட் பற்றி நிறையவே தகவல் உள்ளது!'' - வந்தவுடனே பீடிகையைப் போட்டார் ஷேர்லக். ''கைவசமிருக்கும் செய்திகளை ஒவ்வொன்றாகச் சொல்லுங்கள்!'' என்று நாம் குறிப்பெடுக்க ஆரம்பித்தோம்.

அஸ்ட்ராஜெனிகாவின் ஏற்றம்!

அஸ்ட்ராஜெனிகா பங்கு விலை இந்த மாதத்தில் மட்டும் 30% அதிகரித்துள்ளது. இந்த நிறுவனம் அதன் பங்குகளை, பங்குச் சந்தை பட்டியலில் இருந்து விலக்கிக்கொள்ள (டீலிஸ்ட்) கடந்த 4-ம் தேதி முடிவு எடுத்தது. அன்று மட்டும் பங்கின் விலை 4% அதிகரித்து, அதன் 52 வார உச்சவிலையான 1,286 ரூபாயைத் தொட்டது. டீலிஸ்ட் முடிவுக்கு இயக்குநர் குழு ஒப்புதல் அளிக்கவே, செவ்வாய்கிழமை மட்டும் அந்தப் பங்கின் விலை 7.6% அதிகரித்தது. எப்படியும் சந்தை விலையைவிட அதிக விலையில்தான் நிறுவனம் பங்குகளை முதலீட்டாளர்களிடமிருந்து வாங்கும் என்கிற எண்ணத்தில் பங்குகள் கணிசமாக கைமாறி வருவதாக அனலிஸ்ட்கள் கருத்து தெரி வித்துள்ளனர். இந்தப் பங்கை இந்த மாதத்தின் ஆரம்பித்தில் வாங்கியவர்கள் புத்திசாலிகள். இனிமேல் வாங்குவது புத்திசாலித்தனமான முடிவாக இருக்குமா என்பது சந்தேகமே!

டி.சி.எஸ்.-ன் இறக்கம்!

டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்து வருவதை யடுத்து ஐ.டி துறை பங்குகளின் விலை சரிந்தநிலையில் காணப்படுகிறது. இந்தச் சமயத்தில் நான்காவது காலாண்டில் வருமானம் 1.5 - 2.5%தான் அதிகரிக்கும் என அனலிஸ்ட்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், வரும் 2014-15-ல் வருமானம் 16-17% அதிகரிக்கலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். 2014-15-ல் ஐடி கம்பெனிகளின் வருமானம் 13-15% அதிகரிக்கும் என நாஸ்காம் தகவல் சொல்லி இருக்கிறது. அந்த வகையில் குறுகியகாலத்தில் டிசிஎஸ் நிறுவன பங்கின் விலை குறைந்தாலும், நீண்ட காலத்தில் கணிசமாக அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம்.

இந்த கட்டுரையை முழுமையாக படிக்க விற்பனையில் இருக்கும் நாணயம் விகடனை வாங்கி படியுங்கள்!

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ