Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை எதிர்பார்ப்பு!

அமெரிக்காவின் பெரும்பாலான பொருளாதார குறியீடுகள், அந்நாட்டின் பொருளாதாரம் உயர்ந்து வருவதையே காட்டுவதால், டாலர் புழக்கத்தை குறைப்பதற்காக அமெரிக்கா மாதந்திர பாண்ட் வாங்கும்  திட்டத்தில் தொடர்ந்து 10 பில்லியன் டாலர்களை மாத மாதம் குறைத்து வருகிறது. 
 
கடந்த வாரம் 65 பில்லியன் டாலர்கலிருந்து 55 பில்லியன் டாலர்களாக குறைத்திருக்கிறது. மேலும் வேலையின்மை விகிதம் 6.5 சதவிகிதலிருந்து மேலும் குறையலாம் என்றும் தெரிகிறது. இதையடுத்து ஃபெடரல் வங்கியின் தலைவர் ஜோனட் யெலன் வரும் 2015க்குள் வட்டி விகிதங்களை அதிகரிக்க பரிந்துரை செய்துள்ளார். இதையடுத்து வட்டி விகிதங்கள் எப்போது வேண்டுமானாலும் மாற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   
 
ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் பட்சத்தில் அந்நிய நிதி நிறுவனங்களின் முதலீடுகளை, நமது நாட்டிலிருந்து எடுத்து அவர்களின் நாட்டில் முதலீடு செய்யபடும்பொழுது ரூபாயின் மதிப்புகள் குறைய வாய்ப்புகள் அதிகம்.  
 
கடந்த முறை உணவு பொருட்களின் விலை குறைந்திருந்தாலும், கடந்த கடன் கொள்கை அறிவிப்பின்பொழுது பாரத ரிசர்வ் வங்கி தனது கடன் அளிப்பதற்கான வட்டி விகிதத்தை 0.25 சதவிகிதம் அதிகரித்தது.  இந்த அறிவிப்பு அனைவரின் எதிர்பார்ப்புக்கு எதிராகவே அமைந்தது. சந்தையில் உள்ள பெரும்பாலானவர்கள் வட்டி விகிதம் குறையும் என்றே அல்லது எந்த மாற்றமும் இருக்காது என்று எதிர்பார்த்தார்கள். இந்நிலையில் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி பாரத ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கையில் மாற்றம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் அமெரிக்க வட்டி விகிதங்களை மாற்றம் செய்யும்போது இதில் மாற்றம் இருக்கலாம் என்கிறார் ஐஃபின் நிறுவனத்தின் சீனியர் டீலர் ஸ்ரீனிவாசன்.   
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ