Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அகுலஸ் நிறுவனத்தை பேஸ்புக் வாங்கியது..

கலிஃபோர்னியாவை தலைமை இடமாக கொண்டு இயங்கி வந்த  அகுலஸ் என்ற விர்ட்சுவல் ரியாலிட்டி கேம் நிறுவனத்தை 2 பில்லியன் டாலருக்கு பேஸ்புக் வாங்கியுள்ளது.
 

 


பேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க், ‘‘அகுலஸ் நிறுவனம், சமூக வலைதள தொடர்பை உருவாக்கவும், பொழுதுபோக்கு இணைய விளையாட்டுகளை கொண்டு வரவும் வாய்ப்பாக அமையும்" என்று குறிப்பிட்டார்.
இந்த நிலையில் அகுலஸ் நிறுவனம், 2014 மத்தியில் வெளியிடும் ஹெட்செட்டிற்கு ஏற்கனவே 75,000 ஆர்டர்கள் இணையதளத்தில் குவிந்துள்ளது குறிப்பிடத்தக்கது..

பேஸ்புக் அகுலஸ் நிறுவனத்தை  400 மில்லியன் டாலர் பணமாகவும், 1.6 பில்லியன் டாலர் பங்குகளாகவும் கொடுத்து வாங்க ஒப்பந்தம் செய்யதுள்ளது.

கடந்த மாதம் பேஸ்புக், சுமார் 19 பில்லியன் டாலருக்கு  வாட்ஸ்அப் நிறுவனத்தை வாங்கியது குறிப்பிடத்தக்கது.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ