Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ், நிஃப்டி தொடர் ஏற்றம்!

 

 
வரும் ஏப்ரல் 1 அன்று நடக்கவிருக்கும் பாரத ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கைகளில் ரெபோ ரேட்டில் ஏதும் மாற்றம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் நடப்பு கணக்கு பற்றாக்குறை கட்டுக்குள் வந்து, ஏற்றுமதி அதிகரித்து இறக்குமதி குறைய தொடங்கியுள்ளதுதான். இதையடுத்து தொடர் ஏற்றத்தை கண்டு வந்த இந்திய பங்குசந்தைகள் இன்று (27-03-2014) ஏற்றத்தில் உள்ளன. பங்கு சந்தையின் சென்செக்ஸ் 99 புள்ளிகள் அதிகரித்து 22,194 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி 32 புள்ளிகள் அதிகரித்து 6,634 ஆக உள்ளது.
 
குறிப்பாக ஃபைனான்ஷியல் டெக் மற்றும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா போன்ற பங்குகளின் விலை தலா 2 சதவிகிதம் அதிகரித்தும், பி.ஹெச்.இ.எல், பஞ்சாப் நேஷனல் பேங்க் மற்றும் பாங்க் ஆப் பரோடா போன்ற நிறுவன பங்குகளின் விலை தலா 1 சதவிகிதம் அதிகரித்தும் உள்ளது.  
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ