Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தங்கம், வெள்ளி விலை தொடர் வீழ்ச்சி!

 

 

சர்வதேச சந்தையில் தொடர்ந்து தங்கத்தின் விலை கடந்த மூன்று வாரங்களில் இல்லாத அளவுக்கு தொடர்ந்து குறைந்துள்ளது. மேலும் அமெரிக்காவில் வெளியாகும் அனைத்து குறியீடுகளும் அமெரிக்கபொருளாதாரத்திற்கு சாதகாமாக இருப்பது, அமெரிக்க பொருளாதாரம் முன்னேற்றமடைந்து வருவதை காட்டுகிறது. குறிப்பாக நேற்று வெளியான நீடித்த நாட்கள் உழைக்க கூடிய பொருட்களுக்கான ஆர்டர்கள் கடந்த மாதத்தோடு ஒப்பிடும்போது 2.2 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இது எதிர்பார்க்கப்பட்டதோ 1 சதவிகிதம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் விரைவில் மாற்றப்படலாம் என்ற எண்ணம் வர்த்தகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.
 
இதையடுத்து சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்த நிலையிலேயே காணப்படுகிறது. மேலும் இன்று (27-03-2014) இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை 144 ரூபாய் குறைந்து 28,427 ரூபாயாக உள்ளது. இதேபோல் வெள்ளியின் விலை 129 ரூபாய் குறைந்து 42,917 ரூபாயாக உள்ளது.   
 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ