Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வங்கி கணக்கு இல்லாதவர்களும் ஏ.டி.எம். மூலம் பணம் பெறலாம்!

வங்கிகளில் கணக்கு இல்லாதவர்களும் பிறர் அனுப்பும் பணத்தை ஏ.டி.எம். மூலம் பெறும் வசதியை பொதுத் துறையை வங்கியான பேங்க் ஆஃப் இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது.
 
 
 
வங்கி கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களிடமிருந்து வங்கி கணக்கு இல்லாத வாடிக்கையாளர்களுக்கு தொகையை ஏ.டி.எம். வாயிலாக அனுப்பும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் கடந்த மாதம் கூறியிருந்ததையடுத்து, இந்தச் சேவையை முதன் முறையாக பேங்க் ஆஃப் இந்தியா தொடங்கியுள்ளது. இதில் உள்நாட்டிற்குள் பணம் அனுப்பும் இந்த சேவை ‘உடனடி பண பரிமாற்றம்’ (ஐ.எம்.டி) என்று அழைக்கப்படுகிறது. இந்த வசதியை அமல்படுத்தியுள்ள இவ்வங்கியின் குறிப்பிட்ட ஏ.டி.எம்.களிலிருந்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.
 
இந்த ஐ.எம்.டி. வசதியின்படி இந்த வங்கியின் வாடிக்கையாளர், பணத்தை பெறுபவரின் செல்போன் நம்பரை மட்டும் பயன்படுத்தி இவ்வங்கியின் ஏ.டி.எம். வாயிலாக அல்லது ரீடெயில் இன்டர்நெட் பேங்கிங் வசதியை பயன்படுத்தியும் பணத்தை அனுப்பலாம். பணத்தை பெறுபவர் பேங்க் ஆஃப் இந்தியாவின் குறிப்பிடப்பட்ட ஏ.டி.எம். மையங்களிலிருந்து தொகையை பெறலாம். இதற்கு ரொக்க அட்டை தேவையில்லை. பணம் அனுப்பப்படுபவருக்கு செல்போன் வாயிலாக சில விவரங்கள் தெரிவிக்கப்படும்.
 
பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக்கு மொத்தம் 4,000 ஏ.டி.எம். மையங்கள் உள்ளன. இவ்வங்கியின் குறிப்பிட்ட ஏ.டி.எம். மையங்களில் மட்டும் ஐ.எம்.டி. வசதி உள்ளது. அடுத்த 20 தினங்களுக்குள் இந்த வசதி அனைத்து ஏ.டி.எம்.களுக்கும் விரிவுபடுத்தப்படும். இந்த ஐ.எம்.டி. பரிவர்த்தனை வாயிலாக மாதத்திற்கு ரூ.25,000 வரை பணத்தை அனுப்ப முடியும். ஒரே பரிவர்த்தனையில் அதிகபட்சமாக ரூ.10,000 பெற முடியும். ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் பணத்தை அனுப்புபவரிடமிருந்து கட்டணமாக ரூ.25 வசூலிக்கப்படும்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP