Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றுமதி குறையலாம்!

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி 32,500 கோடி டாலருக்கு இணையான சரக்குகளை ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த இலக்கை விட ஏற்றுமதி குறையும் என்று மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா கூறியுள்ளார். 
 
 
எனினும் கடந்த நிதி ஆண்டை விட ஏற்றுமதி நன்கு அதிகரிக்கும் என்றும், வர்த்தக பற்றாக்குறை கணிசமாக குறையலாம் என்றும் தெரிகிறது. கடந்த நிதியாண்டில் 30,004 கோடி டாலருக்கு சரக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது, அதற்கு முந்தைய ஆண்டை விட 1.8 சதவிகிதம் குறைவாகும். அதேசமயம் பொருளாதார மந்தநிலை காரணமாக சர்வதேச அளவில் பல்வேறு பொருள்களுக்கான தேவைப்பாடு குறைந்ததால் அந்த ஆண்டில் ஏற்றுமதி சற்றே சரிந்து காணப்பட்டது. இந்நிலையில் நடப்பு நிதி ஆண்டில் ஏற்றுமதி 31,200 முதல் 31,500 கோடி டாலர் வரை இருக்கும் என இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பின் தலைவர் ரபீக் அகமது தெரிவித்துள்ளார். 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ