Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காசு... பணம்... துட்டு..!


ஐ.-ஏ.எஸ். தேர்வில் மூன்றாவது ரேங்கில் தேர்வான வினோத், பணம் குறித்து என்ன சொல்கிறார் தெரியுமா? '' பணம் அடிப்படை தேவைகளுக்குப் பயன்படும் கருவி. ஆனால், வீடு முழுக்க கருவிகளை வைத்துக்கொண்டு வாழமுடியாது. பணத்தைச் சேர்த்துக்கொண்டே போனால் ஒருகட்டத்துக்கு மேல் அதைப் பாதுகாப்பதே பெரிய வேலையாகிவிடும்.

ரூபாய் நோட்டை சில்லறையாக மாற்றிக்கொள்வதைப்போல, நான் பணத்தை புத்தகங்களாக மாற்றிக்கொள்வேன்.  அறிவைப் பெருக்க உதவுகிறது என்பதால் பணத்தின்மீது எனக்கு நல்ல மதிப்பு உண்டு.

அடிப்படையில் இன்ஜினீயரான எனக்கு சாஃப்ட்வேர் துறையில் வேலை கிடைத்தது. அடுத்ததைச் சொல்லவே வேண்டாம்... நல்ல சம்பளமும் கிடைத்தது. ஆனாலும் என் மனம் சிவில் சர்வீஸ் பக்கம்தான் இருந்தது. பணத்தால் அடையமுடியாத திருப்தியைத் தரும் இடம் அது!

ஒரு குடும்பம் வாழ்வதற்குப் போதுமான அளவுக்கு வருமானம் வந்துவிடும். அதற்கு மேல் பணம் சம்பாதிக்க எனக்கு ஆர்வம் இல்லை. இதற்கு முன்பே முதலீட்டின் மீது பெரிதாக ஆர்வம்காட்டியவன் இல்லை நான். இனி, அதற்கு ஒதுக்குவதற்கு தொகை இருக்கப்போவதில்லை என்பதால் முதலீட்டுத் திட்டங்கள் இல்லை.

அடிப்படைப் பாதுகாப்பான இன்ஷூரன்ஸ் இருக்கிறது. என் பெற்றோருக்குக் கைகொடுப்பதற்கு மெடிக்கல் பாலிசி இருக்கிறது. சகோதரர்களுக்குக் கொடுப்பதற்கு புத்தக சேமிப்பு இருக்கிறது. இதிலேயே என் வாழ்க்கை நிறைவாக இருக்கிறது.

பணம் சம்பாதிக்கலாம்... தவறில்லை. ஆனால், அதைவிட நான்குபேருக்கு கல்விச் செல்வத்தைக் கொண்டுபோய்ச் சேருங்கள்... அதில் கிடைக்கும் நிறைவு அலாதியானது. அந்தவகையில் செல்வந்தனாக இருக்கும் என்னுடைய அனுபவத்தில் சொல்லும் உண்மை இது''
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ