Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

20 கோடி வருமானவரி கட்டினார் தோனி!!

கடந்த 2013-14 ஆண்டுக்கான வருமான வரியை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மஹேந்திரசிங் தோனி கட்டியுள்ளார் என ஜார்க்கண்டின் வருமானவரித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
 


தோனி 20 கோடி ரூபாயை வருமான வரியாகச் செலுத்தியுள்ளார் என்றும், இவர்தான் பீகாரில் அதிக வரி செலுத்தும் தனி நபர் என்றும், கடந்த ஆறு வருடங்களாக இவர் தான் அதிக வரிச் செலுத்துபவராக உள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.

2012-13ம் ஆண்டில் 22 கோடி ரூபாயை வரியாகச் செலுத்திய தோனி, தற்போது இந்திய அணியின் கேப்டனுக்கான வருமானம் குறைக்கப்பட்டுள்ளதாலும், விளம்பரங்கள் மூலம் வரும் வருவாய் குறைந்துள்ளதாலும், இந்த ஆண்டு வரித்தொகை குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close