Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐடிஎஃப்சி, பந்தன் புதிய வங்கித் தொடங்க அனுமதி..

புதிய வங்கித் தொடங்கும் அனுமதியை தேர்தலுக்கு பிறகு ஆர்பிஐ அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்னதாகவே, ஐடிஎஃப்சி, பந்தன் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் நிறுவனங்களுக்கு
புதிய வங்கித் தொடங்க கொள்கை அடிப்படையில் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.


 

ஐடிஎஃப்சி என்பது உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி உதவி அளித்து வரும் நிறுவனம். பந்தன் கொல்கத்தாவை சேர்ந்த மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனம். இவை 18 மாதங்களுக்குள் வங்கி நடைமுறைகளுக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அதில் திருப்பி அடைந்தால் மட்டுமே ஆர்பிஐ வங்கித் தொடங்க அனுமதி தரும்.

புதிய வங்கித் தொடங்க பிர்லா குரூப், பஜாஜ் ஃபைனான்ஸ், முத்தூட் ஃபைனான்ஸ் உள்ளிட்ட 25 நிறுவனங்கள் போட்டி இட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ