Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 22,509 வீழ்ச்சி!

தொடர் ஏற்றத்தை கண்டு வந்த இந்திய பங்கு சந்தைகள், இன்று (03-04-2014) புராபிட் டேக்கிங் காரணத்தால் பங்கு சந்தைகள் சரிவில் முடிவடைந்தன. இதையடுத்து டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 60.16 ரூபாயாக முடிவடைந்தது. பங்கு சந்தையின் சென்செக்ஸ் 42 புள்ளிகள் குறைந்து 22,509 ஆக முடிவடைந்தது. இதேபோல் நிஃப்டி 16 புள்ளிகள் குறைந்து 6,736 ஆக முடிவடைந்தது. 
 
 
குறிப்பாக பார்தி ஏர்டெல் நிறுவன பங்கின் விலை 3 சதவிகிதம் குறைந்தும், பஞ்சாப் நேஷனல் பேங்க், ஸ்டேட் ஆப் இந்தியா, அதானி பவர், பாங்க் ஆப் பரோடா போன்ற வங்கி பங்குகளின் விலை தலா 2 சதவிகிதம் குறைந்தும், டாடா ஸ்டீல் நிறுவன பங்கின் விலை 1 சதவிகிதம் குறைந்தும் முடிவடைந்தது. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ