Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கிரெடிட் கார்டு உபயோகிப்பவர்கள் எண்ணிக்கை 4% உயர்வு

கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் கிரெடிட் கார்டு உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை 4 சதவிகிதம் அதிகரித்து 2.03 கோடியாக உள்ளது. இதில் தனியார் வங்கிகள் 54 சதவிகித கார்டுகளையும், பொதுத்துறை வங்கிகள் 20 சதவிகித கார்டுகளையும், வெளிநாட்டு வங்கிகள் 26 சதவிகித கார்டுகளையும் வழங்கியுள்ளதாக வேர்ல்டுலைன் இந்தியா கிரெடிட் பேமண்ட் அறிக்கை 2014 தெரிவித்துள்ளது.

 



2013ம் நிதியாண்டில் கிரெடிட் கார்டு மூலம் செலவழிக்கும் தொகை 122.9 கோடியாக இருந்தது, 2014ம் நிதியாண்டில் 17% அதிகரித்து தற்போது 144.3 கோடியாக உள்ளது. இதில் 30% அலங்கார செலவ்ழிப்புகளுக்கும், 12% டிபார்ட்மெண்ட் ஸ்டோரிலும், 20% சூப்பர் மார்க்கெட் மற்றும் ஹோட்டல்களில் பயன்படுத்தப்படுகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ