Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரான்பாக்ஸி நிறுவனத்தை வாங்கிய சன் பார்மா!

சன் பார்மா நிறுவனமானது, ரான்பாக்ஸி பார்மா நிறுவனத்தை 4 பில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளது.  ரான்பாக்ஸி தயாரிக்கும் மருத்து பொருட்களின் தரம் குறித்து எழுந்த விவாதத்தின் விளைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிகிறது. ரான்பாக்ஸி நிறுவனம் இந்திய மற்றும் அமெரிக்கா சந்தையில் அதிக அளவிலான மருந்துகளை விற்பனை செய்து வருகிறது.
 
 
 இது எங்களின் விற்பனை உயர்த்துவதற்கு உதவும் என சன் பார்மா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார். மேலும் தற்பொழுது ரான்பாக்ஸி பங்கை வைத்துள்ள பங்குதாரர்களுக்கு சன் பார்மா நிறுவனம் ஒரு பங்குக்கு 0.8 சன் பார்மா பங்கை தருவதாக கூறியுள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ