Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வளமான வாழ்க்கைக்கு இளம் வயதில் கடன்!

வளமான வாழ்க்கைக்கு இளம் வயதில் கடன்! கடன் இல்லாமல் இருக்கவே நாம் அனைவரும் விரும்பு கிறோம். ஆனால், இன்றைய தலைமுறை யினர் கார், வீடு, உயர்கல்வி, சுற்றுலா போன்ற பலவற்றையும் தங்களது இளம்வயதிலேயே அனுபவிக்க ஆசைப்படுகின்றனர். கடன் வாங்கித் தங்களது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நம்மில் பலரும் இருக்கிறோம். நடுத்தரவர்க்கத்து மக்கள் ஒழுங்காக, தேவைக்கேற்றாற்போல் உபயோகித்தால் கடன் ஒரு நல்ல உபகரணம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால், கடன் என்பது நம்மைக் கவிழ்த்துவிடும். அதை வாங்கவே கூடாது என்கிறவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

 
கடன் கலாசாரம் இங்குப் பரவுவது வெளிநாட்டினர் செய்யும் சதி என்று விநோதமாகப் பேசுகிறவர்களும் உண்டு. உள்ளபடி சொல்லவேண்டும் எனில், கடன் என்பது இருபக்கமும் கூர்மையுள்ள கத்திமாதிரி. அதைச் சரியாகக் கையாளாவிட்டால், வாங்கியவரையே நாசமாக்கும். நீங்கள் கடன் வாங்காமல் கன்சர்வேட்டிவ்வாக இருக்க விரும்புகிறீர்கள் எனில், அப்படியே இருந்துவிட்டுப்போங்கள். ஆனால், நீண்ட காலத்தில் சொத்து மதிப்பினை அதிகரிக்கும் வீட்டுக். . .
 
இந்த கட்டுரையை முழுமையாக படிக்க விற்பனையில் இருக்கும் நாணயம் விகடனை வாங்கி படியுங்கள்!
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ