Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கவர் லாக் ஸ்கிரீன் ஆப்ஸை வாங்கியது ட்விட்டர்

ட்விட்டர் நிறுவனம், ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் ஆப்ஸ்களில் ஒன்றான தேவையான நேரத்தில் தேவையான ஆப்ஸை தேர்ந்தெடுத்துக் கொள்ள உதவும் ‘‘கவர் லாக் ஸ்கிரீன்’’ என்ற ஆப்ஸை வாங்கியுள்ளது.

இது ஏற்கனவே கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாக கிடைத்து வருகிறது. இந்த ஒப்பந்தம் எவ்வளவு ரூபாய்க்கு செய்யபட்டிருக்கிறது போன்ற தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 



கடந்த வருடத்தில் மட்டும் ஸ்மார்ட்போன் பயன்பாட்டில் 78.6% மார்க்கெட் ஷேரை ஆண்ட்ராய்டு வைத்திருப்பதாலும், ஆண்ட்ராய்டு தொழில்நுட்பம் அதிகம் விரும்படுவதாலும் ட்விட்டர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே ஃபேஸ்புக் நிறுவனம் அகுலஸ், வாட்ஸ்அப் போன்ற உடனடி தகவல் பரிமாற்ற ஆப்ஸ்களை வாங்கியதை தொடர்ந்து ட்விட்டரும் களத்தில் இறங்கியுள்ளது, மேலும் இந்த ஒப்பந்தம் தொழில்நுட்ப உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ