Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நிலுவை தொகை செலுத்துவதற்கான கால அளவை நீட்டிக்க வேண்டும்!

கிரெடிட் கார்டு நிலுவை தொகை செலுத்துவதற்கான கால அளவை எந்த விதமான வட்டியும் இல்லாமல் நீட்டிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இதையடுத்து கிரெடிட் கார்டு நிலுவை தொகை குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்தவில்லை என்றால் அதற்கான வட்டியை அடுத்தப் பில்லில் சேர்க்கக்கூடாது. அந்தக் கட்டணத்தைச் செலுத்துவதற்குக் கூடுதலாக ஒரிரு நாட்கள் வழங்க வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. 
 
 
பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு கிரெடிட் கார்டு கடன்களுக்கு 35% & 47% வரை வங்கிகள் வட்டி வசூலித்து வருகின்றன. இதனால் ரிசர்வ் வங்கி முதன் முறையாக கிரெடிட் கார்டு கட்டணங்களை நெறிபடுத்த துவங்கியுள்ளது. இதுவரை முன் கூட்டியே கடனைக் கட்டுவதற்கான கட்டணம், சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிப்பு, நுகர்வோர் கடன் வட்டி விகிதங்கள் போன்றவற்றை ரிசர்வ் வங்கி  நெறிபடுத்தியது குறிப்பிடத்தக்கது. 

 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ